செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

தண்ணீர் கொடுக்க கூட ஆளில்லை. நான் இறந்திருப்பேன்...” தடகள வீராங்கனை ஓபி ஜெய்ஷா கதறல்...

சிந்து, சாக்‌ஷி மாலிக் வாங்கிய பதக்கங்களை கொண்டாடும் அதேவேளையில் ஓபி ஜெய்ஷாவை புறக்கணித்து விட முடியாது.
இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒலிம்பிக்கில் அவருக்கு ஏற்பட்ட இந்த சோக நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
42 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ஓபி ஜைய்ஷாவுக்கு தண்ணீர் கொடுக்க கூட யாருமில்லை என்று புலம்புகிறார். தான் ஓடிய மாராத்தான் களத்தில் ஒவ்வொரு 2 கிமீக்கும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகள் இருந்ததாகவும், ஆனால், இந்தியா சார்பில் ஒருவரும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார் ஜெய்ஷா.
157 பேர் கலந்துக்கொண்ட போட்டியில் இறுதியில் 89வது இடத்திற்கு வந்த அவர், சக்தி இழந்து நிலைகுலைந்து போனதாகவும், பின்னர் அவர் சர்வதேச ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற இந்திய அதிகாரிகளின் அலட்சயம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.