கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தமிழக லாரி ஓட்டுனர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக சேலத்தில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அன்றைய தினம் லாரிகள் எதுவும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு அடைப்புக்கு தமிழ்நாடு பால் முகர்வர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் பெட்ரோல் நிலையங்கள் எதுவும் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் முகவர் சங்கம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 16ம் தேதி பால் வினியோகம் இருக்காது. மேலும், பெட்ரோல் பங்குகளும் இயங்காது.