வியாழன், 8 செப்டம்பர், 2016

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை கொன்றவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளது.

கடந்த 2013, ஆகஸ்ட், 20-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், நரேந்திர தபோல்கர் கொலை பின்னணியில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த வீரேந்திர டாவ்டே இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இவர் மாட்காவோன் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் ஆவார். மேலும், வினய் பவார், சரங் அகோல்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்த தபோல்கரை கொலை செய்வதற்கான வேலை தாவ்டேவிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: new 18