சென்னையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்கு நண்பர் ஒருவர் கடந்த 10-10-2016 அன்று சென்று உள்ளார்.
கடையில் தனக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு கவுண்டரில் அதற்கான தொகையை கொடுத்து இருக்கிறார். பில் போட்டவர் நண்பர் எடுக்காத பொருளுக்கு ரூபாய் 250/விதம் (2×250=500) 500 ரூபாயை நடுவில் சேர்ந்து இருக்கின்றார்.
நாம் எடுத்த காஸ்மெட்டிக்ஸ் பொருள் தான் அவ்வளவு விலை போல என்று எண்ணிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து இருக்கிறார்.
ஊர் வந்து சேர்ந்த அவர் வாங்கிய பொருள்களை எடுத்து பார்த்து இருக்கிறார் பில் கொண்டு பார்க்கும் போது அவர் எடுத்த பொருள்களில் ரூபாய் 250×2 = ரூபாய் 500 மதிப்பு உள்ள பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால், டெலிவரி செய்யும் நபர் ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதனை "டிக்" செய்து டெலிவரி செய்தவர் அந்த குறிப்பிட்ட ரூபாய் 500 மதிப்புமிக்க பொருளை மட்டும் டிக் செய்யவில்லை.
ஆக, தெரிந்து கொண்டே சரவணா செல்வரத்தினம் நிறுவனம் இந்த திருட்டு வேலையை மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் தந்திரத்தை மேற்கொண்டு வருகிறது.
ரூபாய் 500யை இழந்த அவர் மீண்டும் சென்னை சென்று அதை மீட்டு கேட்க அவருக்கு ரூபாய் 1000 ஆகும்.
மக்களே சரவண செல்வரத்தினம் நிறுவனத்தில் பொருட்களை வாங்காதீர்கள்..
அப்படியே வாங்கினாலும் கவனமாக பார்த்து விலையை கொடுக்கவும்.
அப்படியே வாங்கினாலும் கவனமாக பார்த்து விலையை கொடுக்கவும்.
-பாதிக்கப்பட்டவரின் நண்பர்.