✉ ( السلام عليكم ورحمة الله وبركاته )
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
(திருக்குர்ஆன் 88:17)
(திருக்குர்ஆன் 88:17)
பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. 50, 55 டிகிரி பாகை வெயிலிலும், கடும் பாலைவனப் புயலிலும் , மழை , பனி இப்படி பல இயற்கையின் தாக்கங்களை தாக்குப் பிடிக்கும் வல்லமையுடன் ஒட்டகம் படைக்கப் பட்டுள்ளது . பரிணாம வாதிகளால் கியாம நாள் வரை பதில் சொல்ல முடியாத, அவர்கள் முகத்தில் கரியை பூசிக் கொள்ளும் விதமானதாக இதன் படைப்பு உள்ளது !
கடலைப் போல் பரந்து கிடக்கும் பாலைவனத்தில் எந்த உயிரினமும் பயணிக்க முடியாவிட்டாலும் ஒட்டகங்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைக் காண்கிறோம். அதற்கு ஏற்றவாறு ஒட்டகத்திற்குள் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்புத் தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் காரணமாக உடலிலும் இரத்தத்திலும் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் எந்த உயிரினமும் அழிந்து போய் விடும். உயிரினத்தின் இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால் இரத்தம் உறைந்து ஓட்டமின்றி அந்த உயிரினம் செத்து விடும். இந்த நிலை ஏற்படாதவாறு பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டகம், ஒரு நேரத்தில் 90 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தன் உடலுக்குள் உள்ள சிறப்பான தண்ணீர்ப் பையில் தேக்கி வைத்துக் கொள்கிறது. அந்தப் பையிலிருந்து இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறையும் போதெல்லாம் இரத்தக் குழாய்க்குப் பாய்ச்சுகிறது. ஒட்டக இரத்தத்தின் ஒவ்வொரு அணுவும் 200 மடங்கு விரிவடை கின்றது. இதனால் எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பையில் இருக்கும் தண்ணீர் தீரும் வரை இரத்தம் உறைந்து போகாமல் ஒட்டகத்தால் பயணிக்க முடியும். இரத்தத்திற்கு மட்டுமின்றி, தசை களுக்கும் தண்ணீர்ச் சத்து தேவை. அதைத் தண்ணீர்ப் பையிலிருந்து எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு ஒட்டகத்தில் இல்லை. அதனுடைய இந்தத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏராளமான கொழுப்புகள் அதன் திமிலில் சேமிக்கப்படுகின்றன.
கொழுப்பிலுள்ள ஹைட்ரஜனுடன் ஒட்டகம் சுவாசிக்கும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் சேரும் போது, கொழுப்பு தண்ணீராகி தசைகளுக்குச் செல்கிறது. மேலும் பாலைவன மணலின் வெப்பம் சாதாரண நிலப்பரப்பின் வெப்பத்தை விடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். பாலை மணலின் வெப்பம் ஒட்டகத்தைப் பாதிக்காமல் இருக்க அதன் பாதங்கள் அதிக அளவு ரப்பர் போன்ற சதையைக் கொண்டுள்ளன. பாலைவனக் கப்பலாகப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் ஒட்டகத்தில் உள்ள தனித் தகுதிகளை அறிந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இது இருக்க முடியும் என்பதை இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.மனிதா! இப்படிப்பட்ட படைப்பிற்கு நிகரான ஒன்றை உம்மால் உருவாக்க இயலுமா!
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🔘நாமாக உருவாக்கிக்கொண்டவை கடவுளா! அல்லது நம்மை உருவாக்கியவன் கடவுளா!
🔘நம்மை படைத்ததன் நோக்கத்தை சிந்திப்போம்!!
🔘படைப்புகளை விட்டு படைத்தவனை மட்டுமே வணங்குவோம்!!!
🔘நம்மை படைத்ததன் நோக்கத்தை சிந்திப்போம்!!
🔘படைப்புகளை விட்டு படைத்தவனை மட்டுமே வணங்குவோம்!!!
☘☘☘☘☘☘☘☘☘☘