திங்கள், 26 டிசம்பர், 2016

2019 வரை அதிமுக, பாஜக கையில்..

எனக்கு ஜெயலலிதா பிடிக்காது. எம்ஜிஆர் சுத்தமாக பிடிக்காது. அதனால் அதிமுக, ஒரு கட்சியாக நாசமாக போனால் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
சசிகலாவை வெளியேற்றி விட்டால் ரொம்ப சுலபமாக அது நடந்துவிடும். மோடி போன்ற கைதேர்ந்த அரசியல்வாதிக்கு இது தெரியாமல் இருக்காது. செவ்வனே ஓபிஎஸ்ஸை வைத்து மோடி அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார். அதைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் பாரதிய ஜனதா என்ற கிருமி அதிமுகவை அங்கலாய்ப்பு செய்வது கொடுமை. அந்த கட்சியில் பாஜகவை வெறுக்கும் தொண்டர்கள் தான் 90% இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சசிகலா இருந்தால் மட்டும் தான் பாஜகவை வெளியே வைக்க முடியும். இல்லையென்றால் 2019 வரை அதிமுக, பாஜக கையில்..
அதற்கு பிறகு கட்சியின் நிலைமை, அப்போலோவில் இருந்த ஜெ மாதிரி தான். ஏறக்குறைய 35% ஓட்டுகள் வைத்திருக்கும் மிகப் பெரிய கட்சி. கட்சித் தொண்டர்கள் யோசியுங்கள். கட்சி, கட்சியாகவாவது இருக்க வேண்டுமென்றால், விருப்பம் இல்லை என்றாலும் கட்சியின் ஆயுளுக்கு சாதகமான நல்ல முடிவை எடுங்கள்.
டிவி, பத்திரிக்கை, வாட்ஸ் ஆப் வீடியோ என்று பரப்பப்படும் அத்தனை கட்டுக்கதைகளும் காவிகளால் புனையப்பட்டவை.