ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலி! April 09, 2017

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலியாகி உள்ளதோடு, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதியுற்றுவருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வரதய்யபாளையம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் ஒரே வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 200-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts: