ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தருண்விஜய்க்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்! April 09, 2017




தென் இந்தியர்களை கருப்பர்கள் என தெரிவித்த தருண் விஜய்க்கு  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கருப்பின மக்களுடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்த தருண் விஜயக்கு, நாங்கள் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை மட்டுமே இந்தியர்கள் என குறிப்பிடுகிறீர்களா எனவும் தருண் விஜயை சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய தருண் விஜய், கருப்பின மக்களான தென்னிந்தியர்களுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts: