இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே சிக்கல் இருந்து வரும் நிலையில் சீனாவைத் தொடர்ந்து எதிர்த்துவரும் திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் நகருக்குச் செல்வதாக அறிவித்தார். சீனாவுக்கான இந்தியத் தூதரை அழைத்து தலாய்லாமா பயணத்தின் விளைவு கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுத்தது.
இந்த எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் திபெத் தலைவர் தலாய்லாமா ஹெலிகாப்டர் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் நகருக்குச் சென்றார். அங்குப் பவுத்த மதத்தினர் பல்லாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.
சீனாவின் எதிர்ப்பை மீறி இந்தியா வந்துள்ள புத்த மதத்தலைவர் தலாய் லாமா, பிரதமர் மோடி உத்வேகத்துடன் செயல்படுவதாகவும், விவசாயிகளுக்கான நன்மையில் அதிக அக்கறை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் கிராமப்புறப்பகுதிகளில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் தலாய்லாமா வலியுறுத்தியுள்ளார்.