திங்கள், 17 ஏப்ரல், 2017

மாயாவதியுடன் கைகோர்க்கும் அகிலேஷ்.. 2019 எம் .பி.,தேர்தலில் 80 தொகுதிகளையும் அல்ல மெகா திட்டம்.

2019 தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கிவிட்டது. மற்ற எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கும் நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இப்போதே பாஜகவை எதிர்த்து ஒழிக்க களம் அமைக்கத் தயாராகிவிட்டார்கள்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல்வராக யோகி ஆதித்யநாத் என்பவரை நியமித்தது.
அப்போதிருந்து உ.பி.யில் சிறுபான்மையோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருந்தார்.
அவருடைய இந்த அறிவிப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார்.
பகுஜன் சாமாஜ் உள்பட எல்லாக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“உத்தரப்பிரதேசம்தான் மிக அதிகமாக 80 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இங்கு பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.” என்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைக்க தவறியதுதான் பாஜக வெற்றிக்கு காரணம் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.
முன்னதாக, நிதிஷ்குமாரை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவி¢தது மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று லாலுபிரசாத் யாதவ் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், 2019 மக்களவை தேர்தலை சந்திக்க வியூகம் அமைப்பதற்காக பாஜகவின் தேசிய செயற்குழு ஒடிஸாவில் கூடியிருக்கிறது. இதுவரை கால்பதிக்க முடியாத மாநிலங்களை கைப்பற்றுவதற்கான வழிகளை வகுக்கவே பாஜக திட்டமிடுகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால், பாஜகவை தடுத்து நிறுத்த மாயாவதியும் அகிலேஷும் முதலில் இணைந்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் விரைவில் தங்களுடைய கருத்துக்களை வெளியிடும் என்று தெரிகிறது.

Related Posts: