புதன், 19 ஏப்ரல், 2017

22 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் April 18, 2017

22 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம்


சிவகங்கை அருகே பொய் புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறி 22 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை அருகேயுள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இருதரப்பையும் சேர்ந்த சிலர் மீது மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தங்கள் தரப்பு இளைஞர்கள் மீது பொய் புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக ஒருசாரர் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 22 கிராமங்களைச் சேர்ந்த மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Posts: