புதன், 19 ஏப்ரல், 2017

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு! April 19, 2017

பாபர் மசூதி வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானியை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாபர் மசூதி வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்களை விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்களை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து 2 ஆண்டிற்குள் முடிக்கவும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts:

  • குடும்ப அட்டை குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும்… Read More
  • கொய்யா பழம் நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு ப… Read More
  • ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்ற… Read More
  • ஆச்சரியப்படும் உண்மைகள்: 1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3. டைட்டானிக்… Read More
  • India in 1835 Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835.         [1] As it seems to be the opinion of s… Read More