திங்கள், 17 ஏப்ரல், 2017

கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை April 17, 2017

கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை


கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. 

தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பொழிந்தது. நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் திடீர் என்று மழை பொழிந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாத காலமாக பகலில் கடும் வெயில் அடித்து வந்ததால் மலை கிராம பகுதியில் கேரட் உருளை உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலை அடைந்தனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மலை கிராமங்களான பூம்பாறை, பூண்டி, கூக்கால், மன்னவனூர், வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். ஐஸ் மழை காரணமாக குளுகுளு வானிலை நிலவியதால் கோடையை முனிட்டு கொடைக்கானலில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி அளவிற்கு உயர்ந்து வெப்பம் பொதுமக்களை வாட்டியெடுத்தது. இந்நிலையில் திடீரென பெய்த மழையினால் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், வெண்ணந்துர். ஆண்டகளுர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சி நிலவி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடும் வெயிலின் தாக்கத்தினால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை நிலவி வந்த நிலையில்  மாலையில்  திடீரனெ சுமார் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

Related Posts:

  • Quran மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் … Read More
  • கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!! பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வ… Read More
  • நீதிவேண்டீ ராம்குமாரின் சொந்த ஊரில் களத்தில் ராம்குமாரின் சொந்த ஊரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்# மமக_பங்கேற்பு -மமக மாவட்ட செயலாளர் நைனார் முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது யாக்கூப… Read More
  • எளிதாக கொல்லப்படுவதற்கு இந்த தேசத்தில் ஒருவன் எளிதாக கொல்லப்படுவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை.. அவன் இஸ்லாமியனாகவும் ஒடுக்கப்பட்டவனாகவும் இருந்தாலே போதுமானது.. … Read More
  • 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; உரி பயங்கரவாத தாக்குதல்:17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு;ஐ.நா. கண்டனம் காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல… Read More