செவ்வாய், 18 ஏப்ரல், 2017

டெல்லியில் 36வது நாளாக நீடிக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்! April 18, 2017

டெல்லியில் 36வது நாளாக நீடிக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!


டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது!

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும், விதவிதமான போராட்டங்களை முன்னெடுக்கும் விவசாயிகள் நேற்று காய்ந்த புற்களை உண்ணும் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் 36-வது நாளான இன்று, சாட்டையால் அடிக்கும் போராட்டத்தில் விவசயிகள் ஈடுபட்டனர். பிரதமர் மோடி போல் வேடமணிந்த ஒருவர் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போல அவர்கள் நடித்துக் காண்பித்தனர். 

சாட்டையால் அடிக்கும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டம் திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் என்பவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அங்கிருந்த விவசாயிகள் அவருக்கு முதலுதவி அளித்தபின், அருகில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Related Posts: