எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை காக்கும் வகையிலும் வரும் மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாகன எரிபொருள் நிலையங்கள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விறபனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் முரளி, எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் வகையில் வாரம் ஒரு நாள் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என தெரிவித்தார். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைகளுக்காக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் நிலையங்களில் ஒருவர் பணியில் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். மே 14 முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிறு நள்ளிரவு வரை, வாரம்தோறும் எரிபொருள் நிலையங்கள் இயங்காது என்றும் முரளி கூறினார்.