கடலூர் மீன் சந்தையில் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதால் பொதுமக்கள் பாதிப்பு.
கடலூர் முதுநகர் மீன் சந்தையின் பின் வழியாக செல்லும் பாதையில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன் அங்காடிக்கு செல்லும் பொது மக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர்.
கடலூர் நகரில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூடபட்டு ஒரு கடை மட்டும் இயங்கி வரும் நிலையில் தற்போது சாராயம் விற்கபட்டு வருவது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச் சாராயம் விற்போருக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.