ரிலையன்ஸ் ஜியோவின் இலவச திட்டங்களை முறியடிக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனம் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச 4ஜி டேட்டா சேவையால் அதன் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச டேட்டா சேவை முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்களுக்கு இலவச சேவை அளித்து ரிலையன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டது.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்கும் விதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரூ. 249க்கு பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் மூலம் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி. டேட்டா வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் ஒருமாதத்திற்கு 300 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு 2Mbps வரை வேகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் வேறு எந்த நிறுவனங்களும் இது போன்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. மேலும் இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் திட்டத்தை விட அதிக பயன்தரும் திட்டமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது.