புதன், 5 ஏப்ரல், 2017

என்.எல்.சி அதிகாரிகளை விரட்டியடித்த பொதுமக்கள்! April 05, 2017




நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த வந்த என்.எல்.சி. வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று  என்எல்சி நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த தகவலால் அதிர்ச்சியடைந்த ஆதனூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 

இதற்கிடையில் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆதனூர் வந்த என் எல்.சி அதிகாரிகளை பொதுமக்கள் விரட்டியடித்தனர். மேலும் அவர்களது வாகனத்தையும் பொதுமக்கள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts: