புதன், 5 ஏப்ரல், 2017

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்த திமுக! April 05, 2017




உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வழக்கறிஞர் வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான வேலைகள் எதுவும் செய்யாமல் மாநில தேர்தல் ஆணையம் இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி நீதிமன்றத்தை அவமதிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் வில்சன் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராமமோகன்ராவ் மற்றும் சுப்ரமணியன் அமர்வு, பட்டியலில் இடம்பெற்ற பின் வழக்கு விசாரிக்கப்படும் என கூறினர். 

Related Posts: