சனி, 8 ஏப்ரல், 2017

இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக ஆய்வில் தகவல்! April 08, 2017




இந்தியாவில் 22 முதல் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் 65 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளுடன் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

நாடு முழுவதும் ஆயிரத்து 100 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ICICI Lombard நிறுவனம், ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில், 22 முதல் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. 

போதிய வருவாய் இல்லாததே இதற்குக் காரணம் என 55 சதவீத இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்த அறிகுறியுடன் உள்ள இளைஞர்கள் சரியான தூக்கம் இன்றி தவிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பெண்களைப் பொறுத்தவரை 66 சதவீதம் பேர் மன நிம்மதியின்றி இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இளைஞர்களைக் காட்டிலும், முதியவர்களின் மன ஆரோக்கியம் நன்றாக  இருப்பதாகவும் ICICI Lombard நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Related Posts: