பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது 2 வாரத்துக்கு ஒரு முறை மாற்றி வருகின்றன.
இந்நிலையில், தங்கம், வெள்ளியைப் போல், பெட்ரோல், டீசல் விலையையும் தினமும் மாற்றி அமைக்க எண்ணைய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கடந்த 5 ம் தேதி ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார். அன்றாட விலை உயர்வை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், இதில் சிரமம் இருக்க முடியாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.