திங்கள், 10 ஏப்ரல், 2017

கள் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென அர்ஜூன் சம்பத் கோரிக்கை! April 10, 2017

மதுக்கடைகளை மூடிவிட்டு கள் விற்பனையை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வை நலமாக்கிட வெளிநாட்டு மதுபான வகைகளை தடை செய்ய வேண்டும் என்றும், பனைமரக் கள்ளை  பயன்படுத்திட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் வைத்தார். மேலும், தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க கோரி, மலர்த்தூவி  பனை வழிபாடு செய்தார். 

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருவள்ளூர்மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் முறையாக அகற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அர்ஜூன் சம்பத், கள்ளச் சாராயத்தை ஒழிக்க கள் இறக்க அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/10/4/2017/arjun-sambath-seeks-allow-kal-selling-tamilnadu

Related Posts: