தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் ராசிபாளையம் முதல் தருமபுரி மாவட்டம் பாலவடி வரை, ராட்சத மின்கோபுரங்கள் அமைத்து கர்நாடக மாநிலத்துக்கு காற்றாலை மூலம் உற்பத்தி செய்யபடும் 400-கிலோ வாட் மின்சாரத்தை கொண்டு செல்ல மின்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த மின் கோபுரங்களை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500-விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியனர், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர். விளைநிலங்கள் வழியே மின்சாரம் கொண்டுச் செல்லும் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்