கவ் ரக்ஸாஸ் எனப்படும் பசு பாதுகாப்பு இயக்கத்தை ஏன் தடை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பசு பாதுகாப்பு இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபடுவதால் அதனை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பசு பாதுகாப்பு இயக்கத்தை தடை செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதேபோன்று ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட 6 மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். கவ் ரக்ஸாஸ் எனப்படும் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் வடமாநிலங்களில் இயங்கி வருகின்றனர். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி பசு பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
பதிவு செய்த நாள் : April 08, 2017 - 07:55 AM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/88215/supreme-court-asks-why-do-cow-slaughter-be-banned/C7