புதன், 12 ஏப்ரல், 2017

சிறுவர், சிறுமி, இளைஞர்களை சினிமா பார்க்க தூண்டுவது போஸ்டர்கள் தான். April 12, 2017

திரைப்படங்களுக்கு தணிக்கை குழு சான்றிதழ் தருவது போன்று சினிமா போஸ்டர்களுக்கும் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற சட்டம் 1987-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் இதுவரை நடைமுறைக்கு வராதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

வீட்டை விட்டு ஓடிய தன் மகளை கண்டுபிடித்து தருமாறு ஒரு தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மகளை கண்டுபிடித்தனர். அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் சினிமா பார்த்து அதன்படி ஒருவரை காதலித்து அவருடன் ஒடிவிட்டதாக கூறினார்.

இதனால் தணிக்கை குழு படங்களை சரியாக தணிக்கை செய்வதில்லையா? இளம் பெண்கள் படம் பார்த்து கெட்டுப்போகிற அளவிற்கான சினிமாவை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்று தணிக்கை குழுவை கேட்டிருந்தது நீதிமன்றம். இது தொடர்பாக தணிக்கை குழு அதிகாரி மதியழகன் கோர்ட்டில் ஆஜராகி, தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை பின்னர் படத்தில் சேர்த்து திரையிடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறுவர், சிறுமிகளை, இளைஞர்களை சினிமா பார்க்க தூண்டுவது அதன் போஸ்டர்கள் தான். சினிமா போஸ்டர்களுக்கு கட்டாய சான்று அளிக்கும் சட்டம் 1987ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டும், அது ஏன் இன்னும் அமுலுக்கு வரவில்லை? இதுகுறித்து தணிக்கை வாரியம், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts: