புதன், 12 ஏப்ரல், 2017

30வது நாளை எட்டிய தமிழக விவசாயிகள் போராட்டம்! போராட்டத்தை கைவிட மறுப்பு! April 12, 2017

30வது நாளை எட்டிய தமிழக விவசாயிகள் போராட்டம்! போராட்டத்தை கைவிட மறுப்பு!


விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 30-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு நூதனப் போராட்டங்களில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அண்மையில் பிரதமர் அலுவலகம் முன் விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது விவசாயிகளின் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

எனினும், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனையடுத்து டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 30-வது நாளை எட்டியுள்ளது.

Related Posts: