டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை கத்திப்பாராவில் இயக்குனர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கத்திப்பாரா மேம்பாலத்தில், சங்கிலியால் மறித்து அவர்கள் பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நின்றன. தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், சங்கிலியை அறுத்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.
இதையடுத்து போராட்டகாரர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போராட்டகாரர்களுடன் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதற்கு போராட்டகாரர்கள் செவி சாய்க்காததால் , போராட்டகாரர்களை போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 6 பேரை வரும் 25-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.