ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை! April 16, 2017




அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் தொடுத்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என வடகொரியா எச்சரித்துள்ளது!

வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளையும் அணு ஆயுதச் சோதனைகளையும் நடத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத வடகொரியா தன் படைபலத்தைப் பெருக்கியே வருகிறது. இந்நிலையில் சொந்தக் குடிமக்கள் மீது நச்சுவாயுத் தாக்குதல் நடத்தியதாக சிரியா மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்கா கடந்த வாரம் சிரிய ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதேபோல் வடகொரியா மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிடலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எவரையும் வாழ விட்டுவிட மாட்டோம் என வடகொரியா எச்சரித்துள்ளது. சிரியாமீது தாக்குதல் நடத்தியது போன்று வடகொரியாவைச் சீண்டினால் பதிலுக்கு அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்றும் அமெரிக்காவை வடகொரியா எச்சரித்துள்ளது. 

Related Posts: