அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கரையோரம் நிறுத்தியுள்ள படகுகளை, பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.