மதுரையில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பெய்யக்கரை பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பார் உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
பின்னர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி, மதுரை அழகர்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் கருப்பையா, மதுக்கடைக்கு சீல் வைப்பதாக உறுதியளித்ததன் பேரில், மறியல் கைவிடப்பட்டது.