செவ்வாய், 18 ஏப்ரல், 2017

வாரம் ஒரு முறை தொடர்ந்து ஏவுகணைச் சோதனை நடத்தப்படும்! April 18, 2017

வாரம் ஒரு முறை தொடர்ந்து ஏவுகணைச் சோதனை நடத்தப்படும்!


கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், மேலும் பல ஏவுகணைச் சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. 

தென்கொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் வடகொரியா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இதனால் அடிக்கடி பதற்றமேற்பட்டாலும் சீனா போன்ற நாடுகளின் முயற்சிகளின் விளைவாக பதற்றத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக வடகொரியா மேற்கொண்ட பல்வேறு ஆயுதப் பரிசோதனைகள் தென்கொரியாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச உடன்படிக்கைகளை மீறி கடந்த சில மாதங்களாக நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா மேற்கொண்டதால் தென்கொரியாவும், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

Related Posts: