சனி, 22 ஏப்ரல், 2017

உலக சுகாதார மைய பரிந்துரையை மீறி இந்தியாவில் அதிகரித்துவரும் சிசேரியன்! April 21, 2017

உலக சுகாதார மைய பரிந்துரையை மீறி இந்தியாவில் அதிகரித்துவரும் சிசேரியன்!


இந்தியாவில்  அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் அதிகரித்து வருவதாகத் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உலக சுகாதார மையம் கொடுத்துள்ள பரிந்துரைகளை மீறி, அதிக சிசெரியன் பிரசவங்கள் நடந்து வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் அதிர்ச்சி புள்ளி விவரத்தின் விவரம் :

► கடந்த 20 ஆண்டுகளில் சிசெரியன் பிரசவங்கள் 6 மடங்கு அதிகரிப்பு

► ஒரு நாட்டில் 10 - 15 % சிசெரியன் பிரசவங்கள் இருக்கலாம்

► தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா,  ஆந்திரா, கோவா மாநிலங்களில்  சிசெரியன் பிரசவங்கள் அதிகரிப்பு 

► தெலுங்கானாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் 74.9 % சிசெரியன் பிரசவங்கள் 

► அரசு மருத்துவமனைகளை விடத் தனியார் மருத்துவமனைகளில் சிசெரியன் பிரசவங்கள் அதிகரிப்பு 

► மகாராஷ்டிராவில் 58 % சிசெரியன் பிரசவங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 31.4 % சிசெரியன் பிரசவங்கள்

ஆதாரம் : தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை 2014-15

Related Posts: