மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, 30,071 புள்ளிகளை சென்செக்ஸ் எட்டியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்துடன் காணப்படுகின்றன. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 30,071 புள்ளிகளைத் தாண்டியது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 30,024 புள்ளிகளை தொட்டதே தேசிய பங்குச் சந்தையின் அதிகபட்ச அளவாக இருந்தது. இன்று அந்த அளவைத் தாண்டி சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது.
நேற்றைய தினம் ஏற்றத்துடன் முடிவடைந்த தேசிய பங்குச் சந்தையும், இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, நிஃப்டி, 9,346 புள்ளிகளை தொட்டது. சர்வதேச பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை இன்று எட்டியதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.