தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 2017 ஜனவரி ஒன்றாம் முதல் கணக்கிடப்பட்டு, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு 244 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 80 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 122 ரூபாய் முதல் ஆயிரத்து 540 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்.
இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், 2017 மே மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 986 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.