திங்கள், 3 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்! April 03, 2017




டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. 

வேளாண் கடன் தள்ளுபடி, உரிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் 21-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்றும் அதன் தலைவர் தெய்வசிகாமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக, தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன. 

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஆடு, மாடுகளுடன்  மறியல், சாலையிலேயே சமையல் செய்வது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெய்வசிகாமணி கூறியுள்ளார்.

Related Posts:

  • சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம் “தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று… Read More
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெள… Read More
  • டூப்ளீகேட்ல வருமோ! இன்னும் எண்ணலாம் இப்படிடூப்ளீகேட்ல வருமோ! சீனர்களின் அடுத்த டூப்ளீகேட் ( போலி_ கோழி _ முட்டை)விழிப்புணர்வு கொடுக்க உதவுங்கள்… Read More
  • எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள… Read More
  • பீ கேர்புல் மக்க..... எதை மறைக்க இந்த போலியான கணக்கெடுப்பு.. யாரை ஏமாற்ற... 10 ஆண்டுகளுக்கு ஒர் முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்..... 2010 ல் எடுத்து … Read More