இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கட்ந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
முதல்வர் செயலலிதா அவர்களின் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்.
இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதெற்கெல்லாம் முன்னோடியாக , சிங்கப்பூரில் பல மணிநேரம் மழை பெய்தாலும் அந்த நீரில் ஒரு சொட்டு கூட வீணடிக்கப்படாமல் சேகரித்து, அந்த நீரை குடி நீராக பயன்படுத்துகின்றனர்.
அதனால் அந்த ஊரில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. மழைக்காலங்களில் மழைநீரை சேகரித்து ஏரி அல்லது குளங்களில் சேமிப்பது, வீடுகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்து நிலத்தடி நீராதாரம் செய்வது போன்றவைகளை செய்தால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே வர வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவ மழை நமக்கு பெரிதும் கை கொடுக்கிறது. அந்த மழை நீரை வீணாக கடலில் கலக்க விடுகிறோம்.
பொதுப்பணித்துறை ஏரி,குளங்களை தூர் வாரி மழை நீரை சேமிக்க எவ்வித முன்னேற்பாடுகளும் செய்வதில்லை. அரசு அதிகாரிகள் திட்டமிட்டு செய்யபததால் பல திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதில் தாமதம் அடைகிறது அல்லது சேராமலேயே வீணடிக்கப்படுகிறது.
சிங்கப்பூராக மாற்றுவோம் என அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். குடிநீர் பிரச்சனைக்கு மட்டுமாவது சிங்கப்பூரை பின்பற்றினால் நாடும் நலம் பெறும்.