திருச்சி பெண்கள் சிறையில்
போராட்ட மாணவிகளை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்
போராட்ட மாணவிகளை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக இரயிலில் பிரச்சாரம் செய்த பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வளர்மதி, சுவாதி உட்பட 7-மாணவர்களை கடந்த 16.04.17-கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேற்படி பெண் தோழர்களை சோதனை என்ற பெயரில் மாணவிகள் என்றோ விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியவர்கள் என்றோ பாராமல் எவ்வளவோ மறுத்தும், போராடியும் 6 முறைக்கும் மேல் நிர்வாணப்படுத்தி, ஆபாசமாக பேசிய சிறை நிர்வாகத்தையும், காவலர்களையும்
வன்மையாக கண்டிக்கிறோம்.
காவலர்களே நீங்களும் மனிதர்கள் தானா??? உங்களுக்கும் பிள்ளைகள் இருப்பார்கள் இல்லையா??? அவர்களை நீங்கள் இப்படிச் செய்வீர்களா???
வாங்கும் சம்பளத்திற்கு கைது செய்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தானே., ஈவு இரக்கமற்ற ஜடங்களே., உங்கள் மீது வைத்திருந்த துளியளவு மரியாதையையும் இழந்துவிட்டோம்.,