அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், இஸ்ரோ மொத்தம் 2.2 டன் அளவுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ஆற்றலை கொண்டதாக உள்ளது. அடுத்த மாதம் புதிய முயற்சியாக, 4 டன் அளவுக்கு செயற்கைக்கோள்களை, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக கிரண்குமார் தெரிவித்தார்.
இதற்கானப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இனி இந்தியாவின் செயற்கைக்கோள் அனைத்தும் உள்நாட்டில் இருந்து மட்டுமே விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார்.