தமிழகத்தில் படிப்பறிவில்லாதவர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் விதத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, மொத்தமாக 2 கோடியே 3 லட்சத்து 9ஆயிரத்து 523 பேர் படிப்பறிவு பெறாமல் உள்ளனர். இதில், ஆண்களைவிட பெண்களே அதிகம் படிக்காதவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சம் என்ற அளவில் உள்ளது. கல்வி கற்ற ஆண்கள் - 2,80,40,491; பெண்கள் - 2,37,97,16. படிப்பறிவில்லாத பெண்கள் - 1,22,12,39. படிப்பறிவில்லாத ஆண்கள் - 80,97,484. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் - 54,57,742. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்த ஆண்கள் - 31,19,342. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்கள் - 23,38,400.
பதிவு செய்த நாள் : April 25, 2017 - 02:57 PM