நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இதில் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உத்தேச கால அட்டவணையை சீலிட்ட கவரில் மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.18ம் தேதிக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.