நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் ஆகியோர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காந்தி சிலையின் கீழ் தூக்குப்போட்டு கொள்ளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவுவாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.
மாணவி அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரிலும் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியரும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கல்லூரியில் இருந்து அமைதி பேரணியும் சென்றனர்.
மேலும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியரும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர், கல்லூரியில் இருந்து ஊர்வலமாக காந்தி பூங்காவிற்கு சென்ற மாணவர்கள், உயிரிழந்த அனிதாவிற்கு வீர வணக்கம் செலுத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.