நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு, 24 ஜி வழக்கு கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் காணலாம்.
2ஜி என்றால் என்ன?
இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கும் முன்னர், 2ஜி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
2ஜி என்றால் என்ன?
இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கும் முன்னர், 2ஜி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
- இரண்டாம் தலைமுறை அகன்ற அலைக்கற்றை
- தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகள்
- நொடிக்கு 250 kb இணையவேகத்துடன் கிடைக்கும் டேட்டா வசதி
- பேசும் வசதி, எஸ்.எம்.எஸ் வசதி, புகைப்படம் அனுப்புதல், எம்.எம்.எஸ் போன்ற வசதி
- 1G தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம்
- TDMA (Time Division Multiple Access) அல்லது CDMA (Code Division Multiple Access) முறையில் 2G செயல்படும்
- 2009 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை
- அக்டோபர் 2009 - தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
- மே 2010 - கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவுடன் அமைச்சர் ஆ.ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியானது.
- செப்டம்பர் 2010 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் என உச்சநீதிமன்றத்தில் மனு
- நவம்பர் 2010 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு - மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிவிப்பு.
- நவம்பர் 2010 - தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா.
- டிசம்பர் 2010 - நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அடங்கிய டேப்புகள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.
- பிப்ரவரி 2011 - அ.ராசாவின் முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த்தா, ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா கைது.
- பிப்ரவரி 2011 - கைது செய்யப்பட்ட ஆ.ராசா திஹார் சிறையில் அடைப்பு.
- மார்ச் 2011 - 2ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு.
- ஏப்ரல் 2011 - இரண்டு குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்தது.
- மே 2011 - கனிமொழி, கலைஞர் டிவியின் MD ஷரத் குமாருக்கு சம்மன்.
- மே 2011 - கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைப்பு.
- அக்டோபர் 2011 - முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு.
- அக்டோபர் 2011 - குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான விசாரணை தொடங்கியது.
- நவம்பர் 2011 - டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமின்.
- டிசம்பர் 2011 - மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ.
- பிப்ரவரி 2012 - அமைச்சராக ஆ. ராசா ஒதுக்கிய 122 உரிமங்களும் ரத்து.
- பிப்ரவரி 2012 - ப.சிதம்பரத்தை குற்றவாளி என அறிவிக்கக் கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி.
- ஆகஸ்ட் 2012 - ப.சிதம்பரத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.
- ஏப்ரல் 2014 - ஆ. ராசா, கனிமொழி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
- மே 2014 - 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் செயல்பட்டேன் - அ. ராசா.
- ஜுன் 2015 - 2 ஜி ஊழலில் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி முறைகேடாக சென்றது - அமலாக்கத்துறை
- ஆகஸ்ட் 2015 - ஆ. ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு - சிபிஐ.
- நவம்பர் 2015 - குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோரிய கனிமொழியின் மனு நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்
- ஏப்ரல் 2017 - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2ஜி வழக்கின் விவாதங்கள் முடிவடைந்தன
- செப்டம்பர் 20 2017: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 25 ஆம் தேதி வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவிப்பு.
- ஆ.ராசா
- கனிமொழி
- சித்தார்த் பெஹுரா
- ஆர்.கே.சண்டோலியா
- கவுதம் தோஷி
- வினோத் கோயங்கா
- ஷரத் குமார்
- சுரேந்தர பிபாரா
- ஹரி நாயர்
- சஞ்சய் சந்திரா
- ஷாகித் பல்வா
- ராஜிவ் அகர்வால்
- ஆசிஃப் பல்வா
- கரீம் மொரானி
- ரிலையன்ஸ் டெலிகம்யுனிகேஷன்
- யுனிடெக் வைர்லெஸ் பிரைவேட் லிமிடெட்(தமிழ்நாடு)
- ஸ்வான் டெலிகாம்