புதன், 20 செப்டம்பர், 2017

இர்மாவைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் இன்னொரு புயல்..! September 19, 2017

இர்மாவைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் இன்னொரு புயல்..!


இர்மாவைத் தொடர்ந்து மரியா புயல் டொமினிக் குடியரசு நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கரீபியன் தீவுகள், அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களை சூறையாடியது. புயலுடன் பெய்த கனமழையின் எதிரொலியாக பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில் இர்மா புயலைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் உருவான புதிய புயலான மரியா, கரீபிய நாடுகளில் மீண்டும் ஒரு பேரழிவை விளைவிக்கும் என அஞ்சப்படுகிறது. 



இதனால் மிக அதிக அளவு 5ம் எண் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ப்யூட்டோ ரிகோ தீவின் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற இப்புயல் காரணமாக அப்பகுதியில் மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தற்போதைய நிலையில் டொமினிக் குடியரசு நாட்டை மிகத் தீவிரமாக இப்புயல் தாக்கி வருகிறது. தொடர்ந்து அதன் மேற்கில் உள்ள ஹைதி மற்றும் க்யூபாவும் இப்புயலால் பெருமளைவு பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.