முகப்பு > இந்தியா
2ஜி வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்?
September 20, 2017

இந்திய அரசியலில் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் 2ஜி வழக்கை விசாரிப்பது என்பது மிக கடினமான பணிகளில் ஒன்றாகும்.
அந்த கடினமான பணியைச் செய்பவர் நீதிபதி ஓ.பி.ஷைனி. அவரைப் பற்றிய குறிப்புகள்:
✔ 62 வயதான ஓ.பி. ஷைனியின் முழு பெயர் ஓம் பிரகாஷ் ஷைனி
✔ 1981ல் டெல்லியில் காவல் துணை ஆய்வாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர்
✔ 6 ஆண்டு காவல் பணிக்குப் பின்னர் தேர்வெழுதி நீதிபதியானார்
✔ மென்மையாக பேசுபவர் - தீர்ப்பில் கடுமை காட்டுபவர்!
✔ ரெட் ஃபோர்ட் துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்தவர்
✔ காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை சிறையில் தள்ளியவர்