2ஜி வழக்கு இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான வழக்காகும். இந்த வழக்கின் பாதை, வரலாறு, முன்னகர்வுகளை பார்ப்போம்.
2009 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. அக்டோபர் 2009 - தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்தது. பிறகு, மே 2010 - கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவுடன் அமைச்சர் ஆ. ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், செப்டம்பர் 2010 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து பரபரப்பாக அணுகப்பட்ட இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உலக அளவில் பேசுபொருளாக்கியது அன்றைய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராயினுடைய அறிக்கை தான். நவம்பர் 2010 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கை அளித்தது. பின்னர், அதேமாதம் நவம்பர் 2010, தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
டிசம்பர் 2010, நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அடங்கிய டேப்புகள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.ராசாவின் முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த்தா, ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அதேமாதம் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆ.ராசா கைதுக்கு பிறகு
✔ மார்ச் 2011 - 2 ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது
✔ ஏப்ரல் 2011 - இரண்டு குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்தது
✔ மே 2011 - கனிமொழி, கலைஞர் டிவியின் MD ஷரத் குமாருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது
✔ மே 2011 - கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
✔ அக்டோபர் 2011 - முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்பட்டது
✔ அக்டோபர் 2011 - குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான விசாரணை தொடங்கியது
✔ நவம்பர் 2011 - டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமின் வழங்கியது.
✔ டிசம்பர் 2011 - மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ.
✔ பிப்ரவரி 2012 - அமைச்சராக ஆ. ராசா ஒதுக்கிய 122 உரிமங்களும் ரத்து செய்யப்பட்டது.
✔ பிப்ரவரி 2012 - ப.சிதம்பரத்தை குற்றவாளி என அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
✔ ஆகஸ்ட் 2012 - ப.சிதம்பரத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.
✔ ஏப்ரல் 2014 - ஆ. ராசா, கனிமொழி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
✔ மே 2014 - 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் செயல்பட்டேன் என ஆ.ராசா தனது வாதத்தை முன்வைத்தார்.
✔ ஜுன் 2015 - 2 ஜி ஊழலில் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி முறைகேடாக சென்றது என அமலாக்கத்துறை தெரிவித்தது.
✔ ஆகஸ்ட் 2015ல் ஆ. ராசா மீது சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு
✔ நவம்பர் 2015 - குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோரும் கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிதத்து.
✔ ஏப்ரல் 2017 - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2ஜி வழக்கின் விவாதங்கள் முடிவடைந்தன.