வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ரோகிங்கியாவில் (பர்மா) இரத்த ஆறு ஓடுகிறது

Image may contain: 1 person
No automatic alt text available.

Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people and people standing\
Image may contain: 9 people, people smiling
Image may contain: 1 person, smiling

Image may contain: 1 person

Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: one or more people and people standing


மனிதரை கொல்வது
சாத்தான்கள் 
என்று யார் சொன்னது
மனிதனை மனிதன் சாப்பிடும்
காவியுடை அணிந்தவர்கள்தான்
நவீன காலச் சாத்தான்கள்
அன்று ஈழத்தில் அழித்தார்கள்
இன்று பர்மாவில் அழிக்கிறார்கள்
ஏ புத்தனே..!
நீ விட்டுச் சென்ற விலா எலும்பிலும்
கடவாய்ப் பல்லிலும்
விடமேறிவிட்டது
உன் பெயர் சொல்லித் திரியும்
மொட்டைகள்
எல்லாமே காவியுடை தரித்த
காட்டு மிராண்டிகள்
நீ அன்று
பொறுமை சாந்தி சமாதானம் என்றாய்
இன்று
கொல் ,குடி எரி
குமரிகளை கெடு என்கிறார்கள்
உன்னை பின் பற்றும் காவிகள்
ஐயோ முஸ்லீம் என்றாலும்
இந்து என்றாலும்
பௌத்தன் என்றாலும்
குழந்தைகள் எல்லாம் குழந்தைகளே!
இந்தக் கொடியோர் குழந்தைகள்
தேடி கொல்வதை ஏன்
இந் நாறிய உலகம் பார்க்கவில்லை
கண்டனம் தெரிவிக்கத்தான்
ஐ நா சபையா..?
ஐ நா படை எதற்கு காண்டங்கள் விற்கவா..?
சொந்த நாட்டை விட்டு விரட்டப் படுகிறார்களே
ரோகிங்கிய பூர்வீகக் குடிகள்
உலக முஸ்லீம்களே!
மனிதமுள்ள மனிதர்களே!
ஏன் தட்டிக் கேட்காது
மௌனமாய் இருக்கிறீர்கள்
இதையெல்லாம் பார்க்க
பிணங்கள் வீழ்ந்த தேசத்தின் பிள்ளைகள்
எங்களுக்கு
பொறுக்குதில்லையே மனசு
அன்று நாங்கள் அழிந்ததை போல
இன்று இவர்கள் அழிகிறார்கள்
அன்று நந்திக் கடலில் நாம்
தத்தழித்தது போல
இவர்கள் மியன்மார் கடலில்....
மதங்கள் பெயரில் மனிதம் கொள்ளலாம்
இவர்கள் மதத்தின் பெயரால்
மனிதரை கொல்கிறார்களே!
பூர்வீகக் குடிகளை புதைக்கிறார்களே!
எழுக என் நாட்டு மக்களே
எம் நாட்டிலுள்ள மியன்மார்
தூதரகத்தை முற்றுகையிட்டு
ஆற்பாட்டம் செய்க
தலாய் லாமாவின் பிள்ளைகள்
மிருகத்திலும்
கொடியவர்கள் என்பதை
உரத்துச் சொல்க!
அனாதியன்

Related Posts: