சனி, 9 செப்டம்பர், 2017

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்றம் September 08, 2017

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்றம்


நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையில்ல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என யாராக இருந்தாலும் போராட்டம் நடத்தக்கூடாது எனவும், போராட்டம் நடத்த  மாநில அரசு  யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராக கண்டனக்குரலை எழுப்பின. 

இதையடுத்து, நீதிமன்றம் தடை விதித்தாலும் அதை மீறி பொதுக்கூட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.இதையடுத்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டமும் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடையடைப்பு அல்லது போராட்டம் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் போராடலாம் எனவும் அமைதி வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று இணையத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: