புதன், 13 செப்டம்பர், 2017

கவுரி லங்கேஷை சுட்டுக் கொல்லும் முன் வேவு பார்த்த கொலையாளி September 13, 2017

கவுரி லங்கேஷை சுட்டுக் கொல்லும் முன் வேவு பார்த்த கொலையாளி


பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்ற மர்ம நபர், அன்றைய தினம் 3 முறை அவரது வீட்டை வேவு பார்த்தது, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், இருசக்கர வாகனத்தில் கவுரி லங்கேஷ் வசித்த தெருவின் வழியாக கொலையாளி 2 முறை வேவு பார்த்ததும், பின்னர் 3வது முறையாக வந்த போது, லங்கேஷை கொலையாளி சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது. 

முதல் 2 முறையும் கையில் ஆயுதம் இல்லாமல் வந்த கொலையாளி, இரவு நேரத்தில் 3வது முறையாக வரும் போது, தோளில் ஒரு பையுடன் வந்ததும் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. லங்கேஷை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை அந்தப் பையில் வைத்து கொலையாளி எடுத்து வந்ததும் உறுதியாகியுள்ளது. 

பெங்களூருவைச் சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் இதே வகையைச் சேர்ந்தது என்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Posts: