வியாழன், 14 செப்டம்பர், 2017

​உச்சநீதிமன்ற நீதிபதிகளையே குழப்பமடையச் செய்த காவிரி வழக்கு..!! September 13, 2017

​உச்சநீதிமன்ற நீதிபதிகளையே குழப்பமடையச் செய்த காவிரி வழக்கு..!!


காவிரி வழக்கு, புரிந்துக் கொள்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

காவிரி வழக்கின் இறுதி விசாரணை, இன்று 24 வது நாளாக தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது, புதுச்சேரி மாநிலம் தமது வாதத்தை நிறைவு செய்தது. 

இதன் பின்னர், தமிழகத்தின் வாதத்திற்கு, கர்நாடகா தரப்பில் பதில் வாதம் தொடங்கியது. அப்போது, 1924 ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க, தங்களது ஒப்புதல் தேவை என கர்நாடகா சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இரு மாநிலங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் செய்யப்படும் வரை, 1924ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் செல்லும் எனவும் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது. 

இதனையடுத்து, காவிரி வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு புரிந்துக் கொள்வதற்கு சிரமமானது எனக் கூறினர். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related Posts: