நதிகளை இணைப்பது ஒன்றும் சாலைகளை இணைப்பது போன்று எளிதான காரியம் இல்லை என ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். நதிகளை இணைக்கும் முயற்சியில் அந்த நதிகளுக்கே உரித்தான பிரத்யேக சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நதிகளை இணைக்க மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு முந்தைய கால தோல்விகளை நினைத்துப் பார்க்க வேண்டுமென ராஜேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நதிகள் இணைப்புக்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஊழலே அதிகம் நடக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜேந்திர சிங் மக்களை ஒன்றிணைத்து தண்ணீர் சேமிப்பு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நிரூபித்துக்காட்டிய மிக முக்கியமான மனிதராவார். ராஜஸ்தான் மாநிலத்தில் 1985-களில் தொடங்கிய அவரது பணிகள் மூலம் சுமார் 8,600 தண்ணீர் சேமிப்பு குளங்கள், குட்டைகளை உருவாக்கிக் காட்டினார். சுமார் 1000 கிராமங்களில் மக்களோடு இணைந்து தண்ணீர் சேமிப்புத்திட்டத்தை நிறைவேற்றிவர் அவர்.
இதனால், அவர் இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். தண்ணீருக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் ஸ்டாக்ஹோம் விருது, சிறந்த சமூகப்பணிக்கான மகசேசே விருது ஆகியவற்றை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலம் ஆகிய இரண்டிலும் உள்ள கென் - பெத்வா நதிகளை இணைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. மேலும், சுமார் 5.6 லட்சம் கோடி செலவில் மத்திய இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ராஜேந்திர சிங் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.